முகப்பு > விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் என்ன செய்தார் தோனி?

August 28, 2017

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் என்ன செய்தார் தோனி?


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரையும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி ரசிகர்கள் சிலர் மைதானத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். இதனால் இந்த ஆட்டம் சுமார் 30 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் தோனியும் ரோஹித் ஷர்மாவும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணியின் தோல்வியை ஏற்க முடியாத ரசிகர்களின் அத்துமீறலை சிறிதும் கண்டுகொள்ளாத தோனி மைதானத்தில் படுத்து உறங்க தொடங்கிவிட்டார். ரசிகர்களின் கூச்சலையும், அத்து மீறல்களையும் கண்டு மற்ற வீரர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கையில் இது எதையும் கண்டு கொள்ளாத இந்திய அணியின் கூல் கேப்டன் எனப் பெயர் பெற்ற தோனி அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். 

பின்னர் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியபோது வழக்கம்ப்போல் எந்த சலசலப்பும் இன்றி பேட்டிங்க் செய்து வெற்றியை தேடி தந்தார் கூல் பேட்ஸ்மன் தோனி. 

இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தோனியை பாராட்டியும் புகழ்ந்தும் பதிவிட ஆரம்பித்துவிட்டனர். அதனால் மைதானத்தில் தோனி தூங்கிய செய்தி ட்விட்டர் பக்கத்தில் சூடான செய்தியாக பல கிரிக்கெட் வீரர்களாலும், ரசிகர்களாலும் விவாதிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வு பைபிளில் வரும் ஒரு நிகழ்வோடு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கதாகும். இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களோடு படகில் பயணம் செய்யும்போது கடலில் புயல் வீசி பெரும் அலைகள் ஏற்படும் அதைப்பார்த்து இயேசுவின் சீடர்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாவார்கள். ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத இயேசுவோ அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பார். இக்கட்டான சூழலிலும் பதட்டப்படாமல் இருப்பவர்களே சிறந்த தலைவர்களாக இருக்க முடியும் என்பதற்கு தோனி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்