முகப்பு > விளையாட்டு

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட்

August 27, 2017

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட்


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று பல்லேகலேயில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று 3வது ஒருநாள் போட்டி, பல்லேகலேவில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதே நேரத்தில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்