முகப்பு > விளையாட்டு

​தொடர்ச்சியாக 50 வெற்றிகள்: உலக சாதனை படைத்தார் மேவெதர்..!!

August 27, 2017

​தொடர்ச்சியாக 50 வெற்றிகள்: உலக சாதனை படைத்தார் மேவெதர்..!!


அயர்லாந்தின் மெக் கிரிகோரை வென்றதன் மூலம் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் தொடர்ந்து 50-வது வெற்றியை பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டைப்போட்டி நடைபெற்றது. அயர்லாந்து வீரர் மெக் கிரிகோருடன், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேவெதர் மோதினார். 

இந்த போட்டியில் முதல் மூன்று சுற்றுகளில் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட மேவெதர், அதன்பின் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். இதில் நிலைகுலைந்த மெக் கிரிகோர், 10வது சுற்றில் தோல்வியை தழுவினார். 

இந்த வெற்றியின் மூலம் மேவெதர், தொழில்முறை ஆட்டங்களில் தோல்வியே தழுவாமல் தொடர்ச்சியாக தனது 50-வது வெற்றியை பதிவுசெய்து உலக சாதனை படைத்தார். 

முன்னதாக சகநாட்டைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்சியானோவின் சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மேவெதருக்கு பரிசுத்தொகையாக சுமார் 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்