முகப்பு > விளையாட்டு

​உலக பேட்மிண்டன் தொடர்: அரையிறுதிக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம்..!

August 26, 2017

​உலக பேட்மிண்டன் தொடர்: அரையிறுதிக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம்..!


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா முன்னேறியுள்ளனர்.

ஸ்காட்லாந்த் கிளாஸ்கோ நகரில் நடந்த காலிறுதி மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை சன் ஒய்யை, 4-ஆம் இடத்தில் இருக்கும், பி.வி.சிந்து, 21-14, 21-9 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

அரையிறுதியில் உலகின் 10ம் நிலை வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த சென் யூஃபெய்-யை சந்திக்க உள்ளார். 

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திட வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

அரையிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த உலகின் 7ம் நிலை வீராங்கனை நோசோமி ஓகுஹாராவை சந்திக்கிறார் சாய்னா. முன்னதாக ஓகுஹாரா நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளதால் இந்தியாவிற்கு இப்போட்டியில் இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

ஆண்கள் காலிறுதிப் போட்டியில் பங்கேற்ற கிடம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வுடன் 14-21, 18-21 என்ற நேர் செட்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்