இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

2வது டெஸ்ட்: இலங்கை அணி பேட்டிங்

November 24, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5317 Views

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றிச் சமனில் முடிவடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன. முன்னதாக  இந்திய மற்றும் இலங்கை அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப் பயிற்சியில் மேற்கொண்டனர். 

இன்று நடக்கும் போட்டியில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக முரளி விஜயும், இஷந்த் சர்மாவும் களம் இறங்கவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்ததும், தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், இந்த தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணியினர் ஆர்வமுடன் உள்ளனர். 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின்

ஒருநாள் போட்டிகளில் 100-வது முறையாக 300 ரன் சேர்த்து

கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது, ஒரு மைல்கல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தமது

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)