இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

கோலி விரும்பினால் ஓய்வு: பிசிசிஐ

February 23, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9531 Views

இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின்போது, விராட் கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த தொடரில் விளையாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், அதேநேரம் இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம் என்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. 

இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 'Freedom Cup'  கிரிக்கெட் தொடரானது தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர், டி20 போட்டிகளாக மார்ச் 6-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 3 நாடுகள் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் இறுதியில் அறிவிக்கப்படுகிறது. 

முத்தரப்பு கிரிக்கெட் அட்டவணை

மார்ச் 8: வங்கதேசம் – இந்தியா

மார்ச் 10: இலங்கை – வங்கதேசம்

மார்ச் 12: இலங்கை -– இந்தியா

மார்ச் 14: வங்கதேசம் – இந்தியா

மார்ச் 16: இலங்கை – வங்கதேசம்

மார்ச் 18: இறுதிப் போட்டி

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )