இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

August 21, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4924 Views

இந்திய அணி இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டிகளின் முதலாவது ஆட்டம் இலங்கையின் தம்புல்லாவில் இலங்கை தம்புல்லா நகரில் நடைபெற்றது.டாசில் வென்ற இந்திய அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.முதலில் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிரோசன் திக்வெல்லா, குணதிலகா ஆகியோர் ஓரளவு நிலைத்துநின்று விளையாடினர். குணதிலகா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய திக்வெல்லா 64 ரன்களில் ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் ஒருபுறம் தாக்குப் பிடித்து ஓரளவு ரன்கள் சேர்த்தார். பிற்பகுதியில் இறங்கிய 6 வீரர்களும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், பும்ரா, சகல், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் எளிதான இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்சைத் தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டு களமிறங்கிய விராட்கோலியும், சிகர் தவானும் விராட் கோலியும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கு அனுப்பி துவம்சம் செய்த ஷிகர் தவான் 71 பந்துகளில் தனது 11வது சதத்தை பதிவு செய்தார்.ஷிகர் தவான் ஒரு புறம் அதிரடி காட்ட கேப்டன் விராட் கோஹ்லி தனது பங்குக்கு அதிரடி காட்டினார் 50 பந்துகளில் 44வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடக்கம் முதல் கடைசி வரை அதிரடியாக விளையாடிய இருவரும் ஆட்டமிழக்காமல், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 28 வது ஓவரின் இறுதி பந்தில் பவுண்டரி அடித்து ஷிகர்தவான் ஆட்டத்தை முடித்து வைத்தார். 29 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு, 220 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 90 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் தவான் 132 ரன்களும், 70 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் விராட் கோலி 82 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

90 பந்துகளில் 132 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஷிகர் தவான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு 1-0 என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)