முகப்பு > விளையாட்டு

​டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டூட்டி பேட்ரியாட்ஸ் - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்..!!

August 20, 2017

​டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டூட்டி  பேட்ரியாட்ஸ் - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்..!!


தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ்சும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்சும் மோதுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணி அளவில்  நடக்கிறது. 

இதில் நடப்பு சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும்  சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோத உள்ளன. இதனை ஒட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், இன்றையப் போட்டி சவாலாக இருக்கும் என்றும், நல்ல நிலையில் அணி இருப்பதாகவும் கூறினார். பின்னர் இரு அணிகளின் கேப்டன்களும் கோப்பையை  தூக்கி காட்சிப்படுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்