முகப்பு > விளையாட்டு

இந்தியா தோல்வியடைந்ததால் டிவிகளை உடைத்த ரசிகர்கள்!

June 19, 2017

இந்தியா தோல்வியடைந்ததால் டிவிகளை உடைத்த ரசிகர்கள்!


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 180ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் பல இடங்களிலும் ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற்றபோதே இந்திய அணி கோப்பையை  வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 180ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

31ஓவர்கள் கூடக் களத்தில் நிற்க முடியாமல் இந்திய அணி சுருண்டது வீடுகளிலும் பொது இடங்களிலும் தொலைக்காட்சியில் விளையாட்டைக் கண்ட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கிரிக்கெட் வீரர்களின் படங்களைத் தீவைத்துக் கொளுத்தினர். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்து நொறுக்கித் தங்கள் ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டனர். இதேபோல் கர்நாடக மாநிலம் குல்பர்க்காவிலும் ரசிகர்கள் தொலைக்காட்சித் திரைகளை அடித்து நொறுக்கித் தங்கள் வெறுப்பைக் காட்டினர்.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்