முகப்பு > விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி!

August 14, 2017

இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி!


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் அபாரமாக விளையாடி இந்திய அணி கைப்பற்றியது. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. பல்லேகல்லேவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அனி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து பாலோ ஆன் ஆன இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இதனால் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெடுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். 3 டெஸ்ட் போட்டியிலும் இலங்கையை தோற்கடித்து இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை நிகழ்த்தியது.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்