இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை

February 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6965 Views

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. 

போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மாவும், தவானும் களம் இறங்கினர். தவான் 34 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கோலி 35 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, நிலைத்து நின்று ஆடி, 115 ரன்கள் எடுத்தார். இது அவரது 17வது சர்வதேச (ஒருநாள்) சதமாகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. 

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக விளையாடிய அம்லா 71 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியுள்ளது. மேலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது இந்திய அணி. இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

மனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த

கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

உலககோப்பை கால்பந்து தொடரின் லீக்போட்டியில்,  நடப்பு

உலககோப்பை கால்பந்து தொடரில், முன்னணி அணிகளுள் ஒன்றான

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய தினம் 3 ஆட்டங்கள்

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr