இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​கால்பந்து போட்டியில் எதிரணி வீரரின் உயரத்தை கேலி செய்த அமெரிக்க வீரர்!

September 13, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4508 Views

மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நட்புறவு கால்பந்துப் போட்டியில் உயரம் குறைந்த மெக்ஸிகோ வீரரின் உயரத்தை அமெரிக்க வீரர் கேலி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதது கால்பந்து விளையாட்டு, களத்திற்கு உள்ளே வீரர்களும், களத்திற்கு வெளியே ரசிகர்களும் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வர். இது சில நேரங்களில் எல்லை மீறியும் செல்வதுண்டு.

அந்த வகையில் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதிய போட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு மோதல் சம்பவம் நடைபெற்றது. 

அமெரிக்காவின் டென்னஸ்ஸே மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ அணிகள் சர்வதேச நட்புறவைப் பேணும் வகையிலான கால்பந்து போட்டியில் களமிறங்கின.

இந்தப் போட்டியின் 64வது நிமிடத்தில் அமெரிக்காவின் கோல் பகுதிக்குள் மெக்ஸிகோ வீரர் Diego Lainez பந்தை கடத்தி வந்த போது, எதிரணியைச் சேர்ந்த அமெரிக்க பின்கள வீரரான Matt Miazga அதனை தடுத்த போது இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டது.

அப்போது 6.4 அடி உயரம் கொண்ட அமெரிக்க வீரரான Matt Miazga, தன்னை விட உயரம் குறைவாக இருந்த மெக்ஸிகோ வீரரான Diego Lainez-ன் (உயரம் 5.6 அடி) உயரத்தை கேலி செய்யும் விதமாக உடல்மொழியுடன் சைகை காட்டினார்.

பின்னர் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தடுக்கும் விதமாக இரண்டு அணி வீரர்களும், நடுவர்களும் அவர்களுக்கு இடையில் திரண்டனர்.

இதன் பின்னரும் அமெரிக்க வீரர் Matt Miazga, மெக்ஸிகோ வீரர் Diego Lainez-ன் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக கூட்டத்திற்குள் உயரம் குறைந்த அவரை கண்டுபிடிப்பது போல குனிந்து, கைகளால் சைகை செய்தார். அமெரிக்க வீரரின் இந்த செயல் மெக்ஸிகோ அணியில் மற்றொரு வீரரை எரிச்சல் அடையச் செய்தது. அவருடன் மல்லுக்கட்டும் வகையில் அவர் பாய்ந்தார். பின்னர் நடுவர் அவர்களை சமரசம் செய்தார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய மெக்ஸிகோ வீரர் Diego Lainez, தான் அமெரிக்க வீரர் Matt Miazgaவை விட வயதில் 5 வயது மூத்தவன் என்றும், என்னை விட 11 இஞ்ச்கள் உயரம் இருக்கும் அவர் கடவுளின் படைப்பான என்னுடைய உயரத்தை கிண்டல் செய்ததன் மூலம் அவர் கடவுளை கிண்டல் செய்துள்ளார் என்றார்.

மேலும் கால்பந்து விளையாட்டைப் பொருத்த வரையில் உயரம் ஒரு அளவுகோளாக என்றுமே இருந்ததில்லை, இந்த விளையாட்டில் ஜாம்பவன்களாக திகழ்ந்த பலரும் உயரம் குறைந்தவர்களே என்றும் Diego Lainez தெரிவித்தார்.

இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ அணியை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி பெற்றது. கடந்த 2015 ஏப்ரலுக்கு பிறகு மெக்ஸிகோ அணியை தற்போது தான் அமெரிக்க அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றது கவனிக்கத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )