இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​தனது இறுதி போட்டியில் பதக்கத்தை வெல்ல முடியாத ஏக்கத்துடன் விடைபெற்றார் உசைன் போல்ட்..!

August 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4280 Views

தனது இறுதி போட்டியில் பதக்கம் வெல்ல முடியாமல் வெளியேறிய தங்க மகன் உசைன் போல்டிற்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட், தனது தடகள வாழ்வின் இறுதியாக, லண்டனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்சிப் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். 

போட்டியின் போது அவரின் இடது காலில் காயம் ஏற்பட்டதால், வலியில் துடித்து, கதறி, குட்டிக்கரணம் அடித்து கீழே விழுந்தார்.

இதனால் பதக்கத்தை வெல்ல முடியாத ஏக்கத்துடன் உலக உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விடைபெற்றார். 

மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உசைன் போல்டிற்கு தங்களது கரகோஷங்கள் மூலம் பிரியாவிடை அளித்தனர். 

100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் எண்ணற்ற உலக சாதனைகளை புரிந்துள்ள உசைன் போல்ட், தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)