முகப்பு > விளையாட்டு

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்திய அணி அறிவிப்பு!

August 13, 2017

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்திய அணி அறிவிப்பு!


இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடும், 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடும்,  15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோலி, டோனி, தவான், ரோகித் சர்மா, ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ரஹானே, கேதார் ஜாதவ், பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரு அணிகள் மோதும், முதல் ஒருநாள் போட்டி, வரும் 20ம் தேதி டம்புலாவில் நடைபெறுகிறது. 

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்