இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Popup

Breaking News

Jallikattu Game

​தோனி ரிவ்யூ சிஸ்டம் (DRS) தெரியுமா?

February 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
24294 Views

நடைபெற்று வரும் தெனாப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது, அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்ன சம்பவம் என விரிவாக காணலாம்.

தெனாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகளை வரிசையாக வென்றுள்ள இந்திய அணி கடந்த சனிக்கிழமையன்று (10-02-2018) நடைபெற்ற ஒருநாள் போட்டியில் டக்-வொர்த்-லீவிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அன்றைய தினம் நடந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.

போட்டியில் அதிகமான கேட்சுகளை இந்திய வீரர்கள் நழுவ விட்டனர், மோசமான பீல்டிங் மற்றும் இந்திய சுழல் பவுலர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பவுலிங்கும் எடுபடாமல் போனது.

இருப்பினும் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனி அப்போட்டியில் செயல்பட்ட விதம் அவரது ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.

போட்டியில் இந்தியாவின் இலக்கை துரத்திப் பிடிக்க இரண்டாவதாக  களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி, ஆட்டத்தின் 7வது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசிவந்தார்.

அந்த ஓவரின் 4வது பந்தை வீசியபோது அதனை எதிர்கொண்ட ஹசிம் ஆம்லாவின் பேட்டில் படாமல் பேடில்பட்டு கீப்பர் தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது.

அனைத்து இந்திய வீரர்களும் தோனி உட்பட அது கேட்ச் என நடுவரிடம் அப்பீல் செய்தனர். இருப்பினும் நடுவர் அவுட் தர மறுத்து விட்டார்.

உடனடியாக இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா, DRS (Umpire Decision Review System) முறையில் 3வது நடுவரிடம் அப்பீல் கேட்குமாறு அறிவுறுத்தினார். இருப்பினும் அவ்வாறு கேட்க வேண்டாம் என கேப்டன் கோலியிடம் சைகை செய்தார் தோனி.

பின்னர், பும்ரா வீசிய பந்து ஆம்லாவின் பேட்டில்படாமல் பேடில் மட்டும் உரசிச் சென்றது தெரியவந்தது. 

மிகவும் நுட்பமுடன் தோனி களத்தில் செயல்பட்டு வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும், DRS என்பதனை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்றும் அவரை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஏப்ரல் 4 முதல் 15 வரை

தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில்

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20

தென்னாப்ரிக்காவின் சொந்த மண்ணில், ஒருநாள் தொடரை வென்று

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சத்தமில்லாமல் தோனி பல சாதனைகளை

தற்போதைய செய்திகள் Feb 22
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.37 (லி)
  • டீசல்
    ₹ 65.68 (லி)