இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

September 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5148 Views

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளையடுத்து, இறுதியாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியதால் முதல் நான்கு போட்டிகளிலேயே 3க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. 

இந்திய அணி தொடரை இழந்ததால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகினர். இதையடுத்து கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கூடுதல் நெருக்கடியுடன் இந்திய அணி 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், லண்டன் ஓவல் மைதானத்தில் களம் இறங்கியது.

நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

இதையடுத்து 5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், மளமளவென விக்கெட்டுகள் விழுந்தது. இடையில் ராகுல் - பந்த் ஜோடி மட்டும் பொறுமையாக விளையாடி ரன் குவித்தது. ரஷித் பந்தில் ராகுல் சிறப்பாக விளையாடி 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணி அப்படியாவது ஆட்டத்தை டிரா செய்து விடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின்பு சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இதனால் இங்கிலாந்து 4-1 என மாபெரும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )