இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

உலகக்கோப்பை கால்பந்து: 2வது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து - குரோஷியா

July 11, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3709 Views

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன. 

இன்று இரவு 11.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளது. குரோஷியாவை பொறுத்தவரை சிறிய அணிதான் என்றாலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ளதை அந்த அணி உற்சாகமாக கொண்டாடி வருகிறார். 

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை சுவீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற பலபரீட்சை நடத்தும்.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். இன்று வெற்றிபெறும் அணி பிரான்ஸ் அணியிடம் வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )