இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

விம்பிள்டன் டென்னிஸ்: டெல் பொட்ரோ, செரீனா, ஜெலனா, கெர்பர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி!

July 11, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3217 Views

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றுக்கு ஆடவர் பிரிவில் டெல் பொட்ரோ, மகளிர் பிரிவில் செரீனா, ஜெலனா, கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

லண்டனில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் தொடரின் காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவின் டெல் பொட்ரோ 7 க்கு 6, 7 க்கு 6, 5 க்கு 7, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் சைமனை போராடி வென்றார்.

இதேபோன்று மற்றொரு ஆட்டத்தில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் டாரியா கஸாட்கினா 3க்கு 6, 5க்கு 7 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் முன்னணி வீராங்கனை கெர்பரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் , மற்றொரு ஆட்டத்தில் ஜெலனா ஓஸ்டாபென்கோ 7 க்கு 5, 6 க்கு 4 என்ற நேர் செட்களில் சிபுல்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு, காலிறுதியில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 3 க்கு 6, 6 க்கு 3, 6 க்கு4 என இத்தாலியின் ஜியார்ஜியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )