இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

ப்ரீத்தி ஜிந்தா - சேவாக் மோதல்?

May 11, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8955 Views

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வரும் வேளையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவுக்கும், அணியின் இயக்குநர் சேவாகிற்கும் கருந்து மோதல் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் தமிழக வீரர் அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் நல்ல ஃபார்மில் உள்ளதால் அணி 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் 3 தோல்விகளை சந்திதுள்ளதால் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அதிருப்தியில் உள்ளார் எனத் தெரிகிறது.

குறிப்பாக கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முன்னணி பேட்ஸ்மேன்களான மனோஜ் திவாரி, கருண் நாயர் இருக்கும் போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 3வது வரிசையில் இறங்கி 2வது பந்தில் டக்-அவுட் ஆனதுதான் ப்ரீத்தி ஜிந்தா - சேவாக் மோதலுக்கு முக்கிய காரணம் என மும்பையில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் அந்த ஆட்டத்தில் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி. இது மேலும் அவரை எரிச்சல் அடைச் செய்து, வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு செல்லும் முன்னரே சேவாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அந்த பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆட்டத்தில் ராகுல் மட்டும் 95 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இதற்கு காரணம் சேவாக்கின் தவறான அனுகுமுறைதான் என்பது ப்ரீத்தி ஜிந்தாவின் வாதம். இது தொடர்ந்தால் பஞ்சாப் அணியின் பொறுப்பில் இருந்து சேவாக் விலகுவார் என சமூகவலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

மனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த

கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

உலககோப்பை கால்பந்து தொடரின் லீக்போட்டியில்,  நடப்பு

உலககோப்பை கால்பந்து தொடரில், முன்னணி அணிகளுள் ஒன்றான

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய தினம் 3 ஆட்டங்கள்

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr