இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கவே என் மனைவி திட்டமிட்டு புகார் கூறுகிறார் - முகமது ஷமி

March 11, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2692 Views

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இதுதொடர்பாக பேசிய ஷமி, தம் மீது கூறப்பட்ட புகார்களில் எந்த உண்மையும் இல்லை என விளக்கினார். 

தமது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கவே திட்டமிட்டு தம் மீது அடுக்கடுக்காக புகார் கூறப்படுவதாக தெரிவித்த ஷமி, இதுதொடர்பாக தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

தம் மீது தினமும் விதவிதமான புகாரை தனது மனைவி ஹசின் ஜஹான் ஊடகங்களில் தெரிவித்து வருவதாகவும், புகார் தெரிவிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தாலே எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என்றும் ஷமி அப்போது குறிப்பிட்டார். 

விவகாரத்து கேட்டு தனது மனைவியை தாம் மிரட்டியதாக கூறியதில் உண்மையில்லை எனத் தெரிவித்த ஷமி, தனது மகளின் எதிர்கால நலன் கருதி, மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் ஷமி அப்போது தெரிவித்தார்.

இதற்கிடையே, முகமது ஷமியின் புகாருக்கு அவரது மனைவி ஹசின் ஜஹான் மறுப்பு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து தற்காத்து கொள்ளவே இதுபோன்ற புகார்களை முகமது ஷமி தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். 

தமது தவறை ஒப்புக்கொண்டு தம்மிடம் திரும்பி வந்தால், கணவர் முகமது ஷமியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான

பிசிசிஐ-யின் புதிய சம்பள உயர்வில் இந்தியாவிற்கு உலக கோப்பையை

பல பெண்களுடன் தனது கணவருக்கு தொடர்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)