இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்குமுறையை பின்பற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு!

November 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2518 Views

உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்குமுறையை பின்பற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. 

விளையாட்டு வீரர்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த அமைப்பின் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகின்றன. 

இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) வீரர்களுக்கு பரிசோதனைகள் செய்து வருகிறது. இந்நிலையில் விதிமுறைக்குள் வருவதற்கு பிசிசிஐ மறுத்து வந்தது. ஆனால், இந்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்த வேண்டும் என்றும், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில் பிசிசிஐ தேசிய விளையாட்டு அமைப்பு கிடையாது என்றும், அது தன்னாட்சி அமைப்பு என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசிசிஐ-க்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஐசிசி தான் உருவாக்கி செயல்படுத்த முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)