இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

September 10, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3555 Views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அமெரிக்காவின் பீட் சாம்ராசின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். 

அமெரிக்க ஓபன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவின் டெல்போட்ரோவை நோவாக் ஜோகோவிச் எதிர்கொண்டார். வெற்றிபெறும் முனைப்பில் இரு வீரர்களும் சாதூர்யமாக விளையாடியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். 

சுதாரித்து விளையாடிய டெல்போட்ரோ, இரண்டாவது செட்டை கைப்பற்றும் முனைப்பில், தீவிரம் காட்டினார். இருப்பினும், அந்த செட்டை 7-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி டெல்போட்ரோவிற்கு அதிர்ச்சி அளித்தார் ஜோகோவிச். 

மூன்றாவது செட்டிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கி இருந்தது. அந்த செட்டையும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 

இது ஜோகோவிச் வெல்லும் 3வது அமெரிக்க ஓபன் பட்டமாகும், அதே போல அவர் வெல்லும் 14வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது. இதன் மூலம் அமெரிக்காவின் பீட் சாம்ராசின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

31 வயதான ஜோகோவிச் கடந்த சில ஆண்டுகளாக தோள்பட்டை காயங்களால் கடும் அவஸ்தைப்பட்டு வந்தார். இதன் காரணமாக முன்னணி வீரராக திகழ்ந்த அவர் 3 மாதங்களுக்கு முன்னர் தரவரிசைப்பட்டியலில் 22வது இடத்திற்கு சரிந்தார். எனினும் தனது காயங்களில் இருந்து மீண்டு வந்து அமெரிக்க ஓபனை அவர் வென்றிருப்பது சிறப்புக்குரியதாக மாறியுள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )