முகப்பு > விளையாட்டு

​முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு திடீர் கொலை மிரட்டல்

January 10, 2017

​முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு திடீர் கொலை மிரட்டல்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் தாயார் நிருபாவிற்கு கடந்த 5ம் தேதி மர்மநபர்கள் மூலம் கடிதம் வந்துள்ளது. 

இதில் கொல்கத்தா அருகில் உள்ள மிட்னாபூர் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும், பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவும் கங்குலி திட்டமிட்டுள்ளார். இதில் அவர் பங்கேற்க கூடாது எனவும் மீறினால் அவரை கொலை செய்துவிடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.    

இத்தகவலை தற்போது கங்குலி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 7ம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து போலீசுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டதாக கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்