முகப்பு > விளையாட்டு

​2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிஃபா விருதை வென்றார் ரொனால்டோ

January 10, 2017

​2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிஃபா விருதை வென்றார் ரொனால்டோ


2016ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ வென்றார். 

சர்வதேச கால்பந்து சம்மேளமான பிஃபா, ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2016ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது.

அதில், சிறந்த கால்பந்து வீரருக்கான விருது போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் கார்லி லாய்ட் (Carli Lloyd) தட்டிச் சென்றார். 

சிறந்த கோல் அடித்த வீரருக்கான பிஃபா விருது மலேசியாவைச் சேர்ந்த மொஹத் பைஷ் சுப்ரிக்கும் (Mohd Faiz Subri), சிறந்த ஆண் பயிற்சியாளருக்கான விருது இத்தாலியைச் சேர்ந்த க்ளவுடியோ ரனைரிக்கும் (Claudio Ranieri) வழங்கப்பட்டது.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்