முகப்பு > விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்த எம்.எஸ். தோனி

September 01, 2017

புதிய உலக சாதனை படைத்த எம்.எஸ். தோனி


இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், தமது 300வது ஆட்டத்தில் விளையாடிய தோனி, 73 ஒருநாள் போட்டிகளில் அவுட் ஆகாமல் களத்தில் நின்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம் கடைசி வரை நின்று தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய வீரர் என்னும் சாதனையையும் அவர் படைத்தார்.

ஏற்கனவே 99 ஸ்டம்பிங் செய்து இலங்கையின் குமார சங்ககாராவின் சாதனையை சமன் செய்த தோனி, விரைவில் புதிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்