இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

November 1, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4009 Views

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இன்று 5வது ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது. 

அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்பதால், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம். நான்காவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )