இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

INDvsWI: ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி!

November 1, 2018 Posted By : wasim Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3994 Views

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

திருவனந்தபுரத்தில் நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சில் அனல் பறந்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் திணறிப் போயினர். இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுப் போல் சரிந்தன. சாமுவல்ஸ், ஜேசன் ஹோல்டரை தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 புள்ளி 5 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஆல் ரவுண்டர் ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவண் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ரோகித் சர்மா, கோலி ஆகியோர், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் விளாசினார். 14 புள்ளி ஐந்து ஓவர்களில் இந்திய அணி, வெற்றி இலக்கை எட்டியது.

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி,  மூன்றுக்கு ஒன்று என தொடரையும் கைப்பற்றியது. 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா ஆட்ட நாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி, வரும் நான்காம் தேதி தொடங்குகிறது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )