இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஆஷிஷ் நெஹ்ராவின் 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் நிறைவு..!

November 1, 2017 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
21393 Views

இந்தியாவின் முன்னணி இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை இந்தியாவிடம் பறிகொடுத்த நிலையில் இன்று டி-20 போட்டித் தொடரில் களமிறங்கியுள்ளது. 

தற்போது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டி-20 போட்டி தான் ஆஷிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி போட்டியாகும். இத்துடன் தனது 18 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு முழுக்கு போடுகிறார் நெஹ்ரா. தனது சொந்த ஊரான டெல்லியில் நடைபெறும் போட்டியில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் அவர் களமிறங்குகிறார்.

1999 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக அறிமுகமான ஆஷிஷ் நெஹ்ரா, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர் ஆவார்.

காயம் காரணமாக நீண்டநாட்களாக இந்திய அணியில் இடம்பெறத் தவறிய நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 டி-20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட் வீழ்த்தியுள்ள நெஹ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் முடிவு என்பது உடனடியாக எடுக்கப்பட்டது இல்லை என்றும் இது தொடர்பாக கடந்த 5-6 மாதங்களாக சிந்தித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

 


குறிப்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் பவுலிங் செய்யும் விதத்தை பார்த்த பின்னரே இதுவே நான் ஓய்வு பெற சரியான தருணம் என்பதை உணர்த்தியதாகவும் கூறினார்.

நெஹ்ரா ஓய்வு பெறும் விதம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் கூறினார். ஒவ்வொரு மூத்த வீரரும் நெஹ்ரா போன்று மதிப்புடன் விடைபெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோரின் கரங்களால் நெஹ்ராவிற்கு நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.

ஓய்வு பெறவுள்ள ஆஷிஷ் நெஹ்ராவிற்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )