இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சென்னை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

May 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4243 Views

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. 

ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பரபரப்பான கடைசி ஓவரின் 5-வது பந்தில் 177 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )