​டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி! | hyderabad team won against delhi team! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி!

May 11, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4055 Views

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட் செய்தது. 43 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறிய டெல்லி அணியை, தனது அதிரடி ஆட்டத்தால் சரிவில் இருந்து மீட்டார் ரிஷாப் பந்த். 

சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர்களை மிரட்டிய ரிஷாப், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 128 ரன்களை குவித்தார். இவரது இன்னிங்சில், ஏழு சிக்சரும், 15 பவுண்டரிகளும் அடங்கும்.
எனினும், மற்ற வீரர்கள் யாரும் 25 ரன்களைக் கூடத் தாண்டாத காரணத்தால், டெல்லி அணியால் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களே எடுக்க முடிந்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, எந்தவித சிரமமும் இன்றி முன்னேறியது. தொடக்க வீரர் அலெக்ஸ் ஹாலேஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஜோடியாக கேப்டன் வில்லியம்சனும் வெளுத்து வாங்கியதால், அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. 

கடைசி ஓவருக்கு முன்பாகவே, சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )