இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

உலகக் கால்பந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ஜப்பான் அணியினர்!

July 4, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6027 Views

இந்த உலகக்கோப்பையில் எந்த அணி கோப்பையை வென்றாலும் சரி, ஜப்பான் அணியினர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்கள். 

2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பான நாக் அவுட் சுற்றுகள் நேற்றுடன் நடந்து முடிந்தன. நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தன.

நேற்றைய முந்தைய நாள் ஆட்டத்தில் ஜப்பான் அணி தோற்கும் வரை, நாக் அவுட் சுற்றுகளில் அர்ஜென்டினா அணியின் தோல்விதான்  யாரும் எதிர்பார்த்திராத கால்பந்து ரசிகர்கள் மனமுடைந்து போகும்படியான மாபெரும் தோல்வியாக இருந்தது.

பெல்ஜியம் அணியுடனான நேற்றைய முந்தைய நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அணி அபாரமாக விளையாடி ஒரு மணி நேரத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது. 69 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தனது முதல் கோலை அடித்தது. அதற்கு அடுத்த 5வது நிமிடத்திலேயே அதாவது ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தனது இரண்டாவது கோலை அடித்து ஜப்பானுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. ஆட்ட முடிவில் இறுதியாக இரு அணிகளும் 2-2 என சமநிலையிலிருந்த காரணத்தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் அணி வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதிக்குள் நுழைய வழிவகுத்தார். ஆரம்பத்தில் 2-0 என முன்னிலை வகித்த ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவும் என சற்றும் எதிர்பார்த்திராத ஜப்பான் அணியினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.இந்த தோல்வியை ஜப்பான் அணி வீரர்களும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆட்டம் முடிந்தவுடன் ஜப்பான் அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் சேர்ந்து நின்றனர். 2018 உலகக்கோப்பையில் ஜப்பான் அணியின் பங்கேற்பு அத்துடன் முடிவுக்கு வந்ததையடுத்து, அதுவரை அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒருசேர ஜப்பான் அணியினர் நன்றி தெரிவித்தனர். 

ஜப்பான் அணி வீரர்கள் அந்த சமயத்தில் பெரிதளவில் மனம் தளர்ந்திருந்தும், மைதானத்தில் அணியின் தோல்விக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக அதுவரையிலான போட்டிகளில் ரசிகர்களிடமிருந்து தாங்கள் பெற்றுவந்த அன்பினை திருப்பி செலுத்தும் விதமாக நன்றி செலுத்தி ரசிகர்களை அரவணைத்தனர்.  

அதுமட்டுமின்றி தோல்விக்குப் பிறகு அவர்களது உடைமாற்றும் அறையினை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட்டு அங்கு ரஷ்யா நாட்டிற்கு 'நன்றி' என எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். ஜப்பான் அணியினரின் இந்த செயல் ஜப்பான் ரசிகர்கள் பல சந்தர்ப்பங்களில் ஜப்பான் அணி விளையாடிய போட்டிகளுக்குப் பிறகு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ததை நினைவு படுத்துகிறது. ஏன் பெல்ஜியம் உடனான ஜப்பானின் இறுதி ஆட்டத்திற்குப் பிறகு கூட ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் ஸ்டேடியத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் சென்றார்கள். இந்த உலகக்கோப்பையில் எந்த அணி கோப்பையை வென்றாலும் சரி, ஜப்பான் அணியினர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்கள். அவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் மைதானத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதமும் ரசிகர்களிடம் அவர்கள் காட்டிய அன்பும் ரஷ்யாவிற்கு அவர்கள்  நன்றி கூறிய விதமும் மறக்க முடியாத ஒன்றாக இந்த உலகக்கோப்பையில் எழுதப்பட்டு விட்டது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )