இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

அடுத்த மாதம் FIFA 2018 கால்பந்து உலகக்கோப்பை ஆரம்பம்!

May 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3148 Views

ரஷ்யா நடத்தவுள்ள FIFA 2018 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் 14ம் தேதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் தொடங்கவுள்ளது. மொத்தம் 32 அணிகள் 8 குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்ளவிருக்கும் இந்த FIFA 2018 உலகக்கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் 11 மைதானங்களில் நடைபெற உள்ளது. 

இதில் 31 அணிகள் தகுதிப் போட்டிகளின் மூலம் தேர்வாகியுள்ளன. ரஷ்யா போட்டிகளை நடத்துவதால் ரஷ்யா அணி நேரடியாக போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக FIFA உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. நடப்பு உலகக்கோப்பை சாம்பியனாக ஜெர்மனி திகழ்ந்து வருகிறது. 

வரும் ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மாஸ்கோவின் Luzhniki மைதானத்தில் மோதுகின்றன. ஒரு மாதகாலம் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டமானது, முதல் ஆட்டம் நடக்கவுள்ள மாஸ்கோவின் Luzhniki மைதானத்திலேயே நடந்து முடியவுள்ளது. 

கால்பந்து போட்டிகளில் மிகவும் முக்கியமானது FIFA உலகக்கோப்பை போட்டி. இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியானது 21வது முறையாக நடக்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியாகும். மேலும் ரஷ்யா  FIFA உலகக்கோப்பையை பொறுப்பேற்று நடத்துவது இதுவே முதல்முறையாகும். 

அதுமட்டுமன்றி 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெறும் முதல் கால்பந்து உலகக்கோப்பை இது. மேலும் கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதல் உலகக்கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

சமீபத்தில் இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட விராட் -

ஐபிஎல் கிரிக்கெட்டின் அடுத்த சுற்றுக்கு கிங்ஸ் லெவன்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஐபிஎல் தொடரிலிருந்து

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி, பிளே-ஆப் சுற்றுக்கு 

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)