இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், கோப்பையை வென்றது இந்தியா!

July 9, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4333 Views

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, கோப்பையை வென்றது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக ராய் 67 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய போட்டியில் 14 ரன்கள் எடுத்த போது, சர்வதேச போட்டிகளில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

18.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்த இந்திய அணி, 201 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )