இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஆயிரமாவது டெஸ்டில் களமிறங்கும் இங்கிலாந்து!

August 1, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5124 Views

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கிறது. ஆயிரமாவது டெஸ்டில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் இதுவரை சாதனை படைத்த வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவுக்கு எதிராக பர்மிங்ஹாம் நகரின் எட்பாஸ்டன் மைதானத்தில்  இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக கருதப்படுகிறது.

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, 1877ம் ஆண்டில் இருந்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து ஆடவர் அணி, 357 வெற்றிகளையும், 297 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 345 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்துள்ளது. டி-20 போட்டிகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு அணி, ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கிரிக்கெட்டின் நீண்ட நெடுங்கால வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இங்கிலாந்து அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். அந்த அணியில் பங்கேற்று கிரிக்கெட் உலகில் சாதனைகள் படைத்தவர்களையும் இந்த தருணத்தில் நினைவு கூற வேண்டியது அவசியம். 

ஒரு டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்களை வீழ்த்தி, யாரும் நெருங்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரராக விளங்குபவர், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர். 1956ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை எடுத்து அசத்திய ஜிம் லேக்கர், இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 10 விக்கெட்களை வீழ்த்தியவர் இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே மட்டுமே. 

இதேபோல் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை லென் ஹூட்டன் (Len Hutton) தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் விளாசிய 364 ரன்கள்தான், இன்று வரை இங்கிலாந்து அணிக்கு தனி நபர் சாதனையாக இருக்கிறது. தற்கால வீரரான அலஸ்டெர் குக் (Alastair Cook) டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே இங்கிலாந்து வீரர் என்ற தனிப் பெருமையை பெற்றிருக்கிறார். 

இதேபோல் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றிருக்கிறார். இதுவரை 138 போட்டிகளில் விளையாடிருக்கும் ஆண்டர்சன், 540 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கடந்த முதல் மற்றும் ஒரே இங்கிலாந்து வீரரும் ஆண்டர்சன் தான். 

மற்றொரு இங்கிலாந்து பந்து வீச்சாளரான ஸ்டூவர் பிராட், 118 போட்டிகளில் 417 விக்கெட்களை கைப்பற்றி 2வது இடத்தில் இருக்கிறார். இவர்கள் 2 பேர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் என்ற இலக்கை கடந்தவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டக் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு கிடைத்துள்ளது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )