இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

May 17, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1936 Viewsஐபிஎல் கிரிக்கெட்டில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 

குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

சமீபத்தில் இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட விராட் -

ஐபிஎல் கிரிக்கெட்டின் அடுத்த சுற்றுக்கு கிங்ஸ் லெவன்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஐபிஎல் தொடரிலிருந்து

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி, பிளே-ஆப் சுற்றுக்கு 

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)