முகப்பு > அரசியல்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!

September 09, 2017

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!


வரும் 12-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவாளரும், அதிமுக எம்எல்ஏவுமான வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் சென்னையில் வரும் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு, செயற்குழுவுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயனிடம், இந்த மனுவை திங்கட்கிழமை விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன் வழக்கை திங்கட்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்