முகப்பு > அரசியல்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்!

September 09, 2017

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்!


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

தேனியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் குடும்பத்துட்ன் கொலை செய்து விடுவதாக அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியின் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு, நாங்கள் போடும் எலும்புத் துண்டை நாய்கள் சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினகரனுக்கு அளிக்கும் ஆதரவைத் துண்டித்து விட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தால் 10 கோடி ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாரியப்பன் கென்னடி கர்நாடகாவில் இருப்பதால் அவரது உதவியாளர், இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணியினர் இணைந்ததிலிருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதால் மாரியப்பன் கென்னடிக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்