முகப்பு > அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி..?

September 09, 2017

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி..?


வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் சார்பில் 10 ரூபாய் பால் பாக்கெட் மற்றும் புதிய ஐஸ்கிரீம் வகைகள் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு, புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் கொள்முதல் இந்த ஆண்டு 32 லட்சம் லிட்டரை தாண்டி இருப்பதாகக் கூறினார். 

சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் தற்போது இருப்பதை காட்டிலும் அதிக வாக்குகளுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்தியில் பாஜக அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார்.

மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று சூலூர் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர், தினகரன் அணியில் இருந்து தனக்கு பலமுறை அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறியதாக குறிப்பிட்ட கனகராஜ், திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு எம்.எல்.ஏ.க்களை பிரிக்க பார்ப்பதாக தினகரன் மீது குற்றம்சாட்டினார். வரும்  உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்றும் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார். 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்