இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் கடிதம்!

September 8, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4109 Views

முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் கடிதம் அளித்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வரும் 14ம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கடந்த மாதம் 22ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்யும்படி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஆகஸ்ட் 24ம் தேதி 19 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர், நோட்டீஸ் அனுப்பினார். கடந்த 30ம் தேதி, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், இடைக்கால பதில் அளித்தனர். 

அனைவரும் தனித்தனியே, 7ம் தேதி நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், ஜக்கையன் மட்டும் சபாநாயகரை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில், வரும் 14ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் மீண்டும் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)