முகப்பு > அரசியல்

தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டுக்கு இடம் மாற்றம்!

September 08, 2017

தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டுக்கு இடம் மாற்றம்!


புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கர்நாடகாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அங்குள்ள ரிசார்ட்டில் கடந்த 17 நாட்களாக தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அங்கிருந்து சென்னை திரும்பிய அவர்கள், டி.டி.வி. தினகரன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

தினகரன் நேற்று ஆளுநரிடம் மனு அளித்த அதே நேரத்தில், சபாநாயகர் தனபாலை, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சந்தித்து விளக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு மீண்டும் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். 

இதனால், அதிருப்தியடைந்த தினகரன் அணியினர், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எதிர்தரப்பினர் யாரும் சந்தித்து மனம் மாற்றுவதை தடுக்க, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி ரிசார்ட்டை காலி செய்து விட்டு தினகரன் ஆதரவாளர்கள் மைசூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு நேற்றிரவு இடம் பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்