முகப்பு > அரசியல்

பொறுப்பு ஆளுநரை இன்று சந்திக்கிறார் டி.டி.வி. தினகரன்!

September 07, 2017

பொறுப்பு ஆளுநரை இன்று சந்திக்கிறார் டி.டி.வி. தினகரன்!


டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் 19 பேரை சந்திக்க, ஆளுநர் வித்யாசாகர ராவ் சம்மதம் தெரிவித்துள்ளார். 

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் உட்பட 19 எம்.எல்.ஏக்கள்  ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். இதனை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்திக்க ஆளுநர் வித்யாசாகரராவ் நேரம் ஒதுக்கியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளனர். இந்த சூழலில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தினகரன் தலைமையில் ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்