இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

​மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார்மனு அளித்த நடிகர் விஷால்!

December 6, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6536 Views

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் அளுங்கட்சியின் தலையீடு இருப்பதாகக் கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நடிகர் விஷால் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களை அதிகாரப்பூர்வமாக நடத்துவது இந்திய தேர்தல் ஆணையமே. இதில் வேட்பாளரோ அல்லது வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்களோ ஏதேனும் சந்தேகமோ அல்லது புகாரோ அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தான் புகார் அளிக்க வேண்டும். மேலும் அந்த புகார் மனுவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முகவரியைதான் குறிப்பிட வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொளப்படாமல் நிராகரிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்து விஷால் விளக்கம் கோரினார். விஷால் தேர்தல் அதிகாரிகளை சந்தித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வந்தது. விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று (05-12-2017) நள்ளிரவில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிகப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இதனை எதிர்த்து நடிகர் விஷால் இன்று மாலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் எனவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

ஆனால் இந்த புகார் மனுவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முகவரியை குறிப்பிடுவதற்கு பதிலாக சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் முகவரியை விஷால் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மட்டுமே மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இடைத்தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு முடிவு எடுக்ககூடிய எந்த அதிகாரமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள வித்தியாசம் கூட நடிகர் விஷாலுக்கு தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் நடிகர் விஷால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ராகுல்காந்திக்கு காலனி எடுத்துக் கொடுக்கும் எடுபிடிதான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்றும் தமது ஆதரவாளர்களை 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டத்திற்கு உட்பட்டே

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)