முகப்பு > அரசியல்

முதல்வர் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

September 05, 2017

முதல்வர் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!


பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். 

நீண்ட இழுபறிக்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சமீபத்தில் இணைந்தனர். ஆனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நடத்தும் அதிரடி நடவடிக்கைகள் அதிமுகவின் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கூட்டியுள்ளார். இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஆனால் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று என்ன நடக்கும் என்கிற பரபரப்பு தமிழக அரசியலை சூழ்ந்துகொண்டுள்ளது. 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்