இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

ஆளுநர் மீது துரைமுருகன் கடும் குற்றச்சாட்டு!

August 30, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2968 Views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என 19 அதிமுக எம்எல்ஏ-க்கள் தெரிவித்துவிட்ட நிலையில், அது உட்கட்சி விவகாரம் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறுவது ஏற்கத்தக்க வாதம் அல்ல என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவது அவருடைய பதவிக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சரியான முடிவை எடுக்கும் என்றும், அதை தற்போது வெளியிட முடியாது என்றும் துரைமுருகன் கூறினார். 

சட்ட விதிகளின் படியே ஆளுநர் செயல்படுவதாகவும், அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப, அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தற்போது நடப்பது உள்கட்சி விவகாரம் என ஆளுநர் கூறியிருப்பதில் தவறில்லை என குறிப்பிட்டார். தங்கள் விருப்பப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது தவறானது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தற்போதைய சூழலில் தமிழகத்தில் உடனடியாக தேர்தல் வராது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)