இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதுசூதனன்!

November 30, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8456 Views

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளாராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அதிமுக  அவைத்தலைவராக உள்ள, மதுசூதனனை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்யப்பட்டது. 

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்ட 27 பேர், விருப்ப மனு அளித்ததால், வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஆர்.கே.நகரில் போட்டியிட  மதுசூதனன் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மதுசூதனன் கூறியுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் தமது வெற்றியை பொருத்திருந்து பாருங்கள் என்று கூறினார். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி தாம் வேறு எதையும் தெரிவிக்கமாட்டேன் என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr