இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​விவசாயிகளின் கடன்கள் சில நாட்களுக்குள்ளாக தள்ளுபடி செய்யப்படும் - எடியூரப்பா

May 17, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2042 Views

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

முதலமைச்சராகப் பதவியேற்ற எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷாவின் பரப்புரையே காரணம் என தெரிவித்த எடியூரப்பா, தமக்கு ஆதரவு அளித்த அனைத்து பாஜக தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். 

விவசாயிகளின் கடன்கள் சில நாட்களுக்குள்ளாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்த எடியூரப்பா, கர்நாடக மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். தற்போது ஏற்பட்டிருப்பது சிறிய பின்னடைவுதான் என தெரிவித்த எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை என தெரிவித்துள்ளார். 

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி எனவும், அவரது

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )