இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

“காவிரி நீர் பிரச்சனையில் கருணாநிதி கடப்பாறையை முழுங்கிவிட்டார்” - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

April 17, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3060 Views

காவிரி நீர் பிரச்சனையில் கருணாநிதி கடப்பாறையை முழுங்கிவிட்டார் எனவும் அதனை தீர்க்க ஸ்டாலின் தற்போது இஞ்சி கசாயம் குடித்து வருகிறார் எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக, உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நாகையில் நடைபெற்றது. விழாவில், 389 மாணவ, மாணவிகளுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், காவிரி நீர் இதுவரை தமிழகத்திற்கு கிடைக்காமல் இருப்பதற்கு முழு காரணம் திமுகதான் என்று குற்றம்சாட்டினார். 

மேலும், காவிரி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி கடப்பாறையை முழுங்கிவிட்டதாகவும், அதனை தீர்க்க அவரது மகன் ஸ்டாலின் இஞ்சி கசாயம் குடித்து வருவதாகவும் விமர்சனம் செய்தார். மேலும், காவிரி விவகாரத்தில் திமுக செய்தது வரலாற்று பிழை என்றும், அழிக்கமுடியாத பிழை என்றும் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்தார்.

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )