இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என ரஜினி பரபரப்பு பேச்சு!

May 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3955 Views

அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

12 ஆண்டுகளுக்கு பின் தமது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று  திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த், எந்த திரைப்படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் அரசியல் அப்படி அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும், 21 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தினால் அரசியல் கூட்டணி ஒன்றுக்கு ஆதரவளித்ததாகவும், இதனை பயன்படுத்தி தன் ரசிகர்களை ஒரு சிலர் அரசியலில் தவறாக பயன்படுத்தியதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். 

தங்கள் குடும்பம், குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை ரசிகர்கள் அறவே தவிர்த்து விட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)