இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

கருணாநிதி-​ மோடி சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது - பொன்னார்!

November 12, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3994 Views

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் உள்நோக்கம் கற்பிப்பது எதிர்கட்சிகளுக்கு தேவையான அரசியலாக உள்ளது என குறிப்பிட்டார்.

வருமான வரி சோதனை பட்டியலில் அடுத்து தாமும் இருப்போமா என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை மக்கள் புரிந்து கொண்டு வரவேற்பு அளித்துள்ளதாக குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு இன்னும் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடி-கருணாநிதி சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)