இன்றைய வானிலை

  • 35 °C / 95 °F

Jallikattu Game

​அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வார்களா?

March 11, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7993 Views

காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்தால் உரிமைகளை கேட்டுப் பெறுவது கடினம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் வாதங்கள் போதுமான அளவுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார். 

காவிரி விவகாரத்தில் ஆட்சியில் இருந்தபோது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இத்தனை உறுப்பினர்கள் இருக்கும் போதே உரிமைகளை பெற போராட வேண்டி உள்ள நிலையில், அவர்கள் ராஜினாமா செய்தால் உரிமை பெறுவது கடினம் என்றும் முதல்வர் கூறினார். அப்போது, ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சட்டத்தில் வழிவகை இருந்தால் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகளை

நாடாளுமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப்

நாட்டு மக்கள் மீது ’பொய்யான வாக்குறுதிகள்’ என்னும் தாக்குதலை

தற்போதைய செய்திகள் Jul 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.45 /Ltr (₹ -0.14 )
  • டீசல்
    ₹ 71.92 /Ltr (₹ -0.14 )